கோவையை குறிவைக்கும் சார்ஜா - சலுகைகளை அள்ளி வீசி முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள ஹம்ரியா ஃப்ரீ ஸோன் தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க ஏற்றுமதி, இறக்குமதி இலவசம், வரி குறைவு என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி கோவை தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி.



கோவை: கோவையில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சார்ஜாவில் உள்ள அம்ரியா தொழிற்பேட்டை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.



ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள மிகப்பெரிய தொழிற் பேட்டைகளில் ஒன்று தான் ஹம்ரியா ஃபிரி சோன் அத்தாரிட்டி. சார்ஜாவில் 30 கோடி சதுர அடியில் அமைக்கப்பட்டது இந்த தொழிற்பேட்டை. கடலுக்கு அருகாமையில், துறைமுகம் ஒட்டி அமைந்திருக்கும் இந்த தொழிற்பேட்டை, அனைத்து வகையான தொழில்களையும் ஆரம்பிக்க ஏதுவான சூழ்நிலையை கொண்டது.

முதலீட்டாளர்கள் தொழிலை ஆரம்பிக்க வேண்டுமென்றால் புதிதாக கட்டிடம் கட்டி, அதற்குள் மிஷின்களை பொருத்தி, தொழிலை ஆரம்பிக்க வேண்டி இருக்கும். ஆனால் ஹம்ரியாவில் தொழில் கூடங்கள் முன்னதாகவே கட்டி வைக்கப்பட்டு, தொழில் ஆரம்பிக்க தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன. தடையில்லா மின்சாரம், 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதி என தொழில் துறைக்கு தேவையான அனைத்தும் தடையின்றி இந்த தொழில்பேட்டையில் தரப்படுகின்றன. இதனை பிளக் அண்ட் பிளே சிஸ்டம் என்றும் அழைக்கின்றனர்.

உலக முதலீட்டாளர்களை குறிவைத்த ஹம்ரியா



ஐக்கிய அரபு அமீரகத்தின் வளமான நாடான சார்ஜா, தற்பொழுது அயல்நாட்டு முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது. இதுவரை 163 உலகநாடுகளிலிருந்து 6,500 முதலீட்டாளர்ளை தன்வசப்படுத்திய சார்ஜியாவின் ஹம்ரியா ஃபிரி சோன் அத்தாரிட்டி, உலக அளவில் வியாபித்து வீறு நடைபோட முனைப்பு காட்டிவருகின்றன.

அதனடிப்படையில் ஹம்ரியா ப்ரீ சோன் அத்தாரிட்டி சார்ஜா நாட்டின் தொழில் வளத்தை பெருக்கி வருகின்றன. இதன் மூலமாக நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்பை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றன.

கோவைக்கும் சிவப்பு கம்பளம்







இந்த நிலையில் ஹம்ரியா ஃபிரி சோன் பிரதிநிதிகள் தங்கள் நாட்டில் தொழில் துறையினருக்கு தரப்படுகின்ற சலுகைகள் குறித்து கான்பிரன்ஸ் நடத்தி வருகின்றனர். அதன் ஊடாக உலக தொழில் முதலீட்டாளர்களை தங்கள் நாட்டுக்கு ஈர்த்து வருகின்றனர்.



தொழில் துறையில் கொடி கட்டி பறக்கும் தொழில் நகரங்களை குறிவைத்து முதலீடார்களை ஈர்த்து வரும் ஹம்ரியா, அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் தொழில்துறை முதலீட்டாளர்களை தங்கள் நாட்டிலே தொழில் துவங்க அழைத்து இருக்கின்றது.



அசோசேம் (அனைத்து சேம்பர் கூட்டமைப்பு) என்ற அமைப்புடன் இணைந்து கோயம்புத்தூர் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், கொடிசியா, திருப்பூர் எக்ஸ்போர்ட் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

285 முதலீட்டாளர்களுடன் சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். கோவை தொழில் முதலீட்டாளர்களிடம், சார்ஜாவில் தொழில் தொடங்க சிவப்பு கம்பளம் இட்டு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

No Income Tax.. No Corporate Tax.. No Personal Tax.. நீங்க வந்தா மட்டும் போதும்!

இந்த நிலையில் தொழில் ஆரம்பிக்க ஹம்ரியா அழைத்தாலும் வரி, செலவு என்னவாகும் என்ற கேள்வி எழக்கூடும். அதற்கான பதில் தான் சற்று உற்று நோக்கச் செய்கின்றன. சார்ஜாவில் உள்ள ஹம்ரியா தொழில் பேட்டையிலே தொழில் ஆரம்பித்தால் பல சலுகைகள் தரப்படுகின்றன. 



முறையான ஆவணங்கள் சமர்பித்தால் 60 நிமிடங்களில் கம்பெனியை ரிஜிஸ்டர் செய்துவிடுகின்றனர். 24 மணி நேரத்தில் லைசன்ஸ் கரங்களை வந்தடைகின்றன. Income Tax, Corporate Tax, Personal Tax என்று எந்த வரியும் இல்லை.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரியும் இல்லை. தொழிற்பேட்டையில் கட்டிட வாடகையும் மற்ற நாடுகளை விட குறைவு. இதுபோன்ற சலுகைகளை அள்ளி வீசி அரபு அமீரகத்தை நோக்கி தொழில் ஆரம்பிக்க சார்ஜியாவின் ஹம்ரியா ஃபிரி சோன் அத்தாரிட்டி அழைத்து வருகின்றனர்.

சார்ஜாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய வரி இல்லை. அந்த உற்பத்தி பொருட்களை அமீரகத்தில் மட்டுமே விற்பனை செய்ய தடை ஹம்ரியா தடை விதித்துள்ளது.

இங்கே இருக்கலாமா..? இல்ல சார்ஜா பக்கம் போலாமா..? - என்ன சொல்கின்றனர் சந்தை மதிப்பீட்டாளர்கள்?

இந்த நிலையில் பல்வேறு சலுகைகளை தந்தாலும், அமீரகம் போகலாமா? தொழில் ஆரம்பிக்கலாமா என்ற கேள்வி எழக்கூடும். இதுகுறித்து நாம் சந்தை மதிப்பீட்டாளர் குணா என்பவருடன் பேசினோம்.



சார்ஜா ஹம்ரியா ஃபிரி சோன் தொழிற்பேட்டையில் ஒற்றை சாளர முறைப்படி ஆவண பணிகள் நடக்கின்றன. இதனால் லஞ்சம் இல்லாத அலுவலக பணிகள் நடைபெறும். இந்தியாவில் இருந்து தயாரித்து வளைகுடா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களை, சார்ஜாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தால், வரி இல்லாத நிலையில் அதிக லாபம் கிடைக்கும்.

ஏற்றுமதி செலவும் குறையும். முதலாளிகளுக்கு பொருளாதார முன்னேற்றமும், கூடுதலான லாபமும் கிடைக்கும். வரி உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் நெருக்கடிக்கு உள்ளான தொழில் முனைவோர் சார்ஜாவை நோக்கி படையெடுக்க முனைப்பு காட்டுவார்கள். ஆனால் அங்குள்ள கள நிலவரத்தை ஆராய்ந்து தொழில் ஆரம்பிப்பதே ஆகச்சிறந்த முன்னெடுப்பாக அமையும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...