மலேசியாவிலிருந்து சொந்த ஊர் திரும்ப உதவிய அமைச்சருக்கு பெண் நன்றி

குன்னூரிலிருந்து ஏஜென்ட் மூலம் மலேசியாவிற்கு வேலைக்குச் சென்று உணவு, இருப்பிடம் இல்லாமல் 5 மாதங்களாகத் தவித்த சிவகாமி என்பவர், தாம் சொந்த ஊர் திரும்ப உதவிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.


ஈரோடு: மலேசியாவிலிருந்து சொந்த ஊர் வர உதவிய அமைச்சரை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட பெண் நன்றி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெருவை சேர்ந்தவர் சிவகாமி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காகத் தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார்.

பின்னர் அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் கொடுமைப்படுத்தி வருவதாகவும், தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் தனது முயற்சியால் இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு சிவகாமியை மீட்டார். இதனையடுத்து சிவகாமி விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தார். பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...