கோவை கணபதி காமராஜபுரத்தில் புதிய ரேசன் கடை கட்டிடம் திறப்பு - எம்பி பி.ஆர்.நடராஜன் பங்கேற்பு

எம்பி பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோவை கணபதி காமராஜபுரத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை இன்று திறக்கப்பட்டது. பல்லாண்டு கோரிக்கை நிறைவேறியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கோவை:கோவை கணபதி காமராஜபுரம் பகுதியில் ரூ.25லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரேசன் கடை கட்டிடத்தை பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கணபதி காமராஜபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, பி.ஆர்.நடராஜன் எம்பி., புதிய ரேசன் கடைக்கான கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டது.

இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், ரேசன் கடைக்கான புதிய கட்டிடத்தை இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவைநாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையாளர் மகேஸ் கண்ணன், உதவிப் பொறியாளர் சரவணகுமார், 31ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வைரமுருகன், 12ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், வடக்கு நகரச்செயலாளர் சுந்தரம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக பிரமுகர்களும், பொதுமக்களும் திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...