உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

உடுமலை அருகே போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பள்ளபாளையம் கிளை சார்பில் இன்று தொடங்கப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களிடம் போதைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கம் பள்ளபாளையம் கிளையில் துவங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில், உடுமலை முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் போதைக்கு எதிராக முதல் கையெழுத்திட்டுத் துவக்கிவைத்தார்.



சிஐடியூ செயலாளர் ஜெகதீசன், வி.தொ.ச கமிட்டி சுந்தரம், இயேசுராஜ் முன்னிலை வகித்தனர். இதில் உடுமலை பொருளாளர் குமரகுரு, கமிட்டி உறுப்பினர்கள் மாசானி, கருப்புச்சாமி, அஜீத்குமார் பெருமாள்சாமி, இமான் செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் பொதுமக்களிடமும் கடை வீதிகளிலும் துண்டறிக்கை கொடுத்து போதைக்கு எதிராகப் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நூற்றுக் கணக்கானோரிடம் கையெழுத்துப் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...