‘யக்‌ஷா’ 2ஆம்‌ நாள்‌ விழா - மக்களை பரவசத்தில் ஆழ்த்திய சஷாங்கின் புல்லாங்குழல்‌ இசை!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தில் ‘யக்‌ஷா’ கலை திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 2ஆம் நாளான இன்று, 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.


கோவை: ஈஷாவின்‌ 'யக்‌ஷா' கலைத்‌ திருவிழாவில்‌ 'செவாலியே' விருது வென்ற சஷாங்க்‌ தனது புல்லாங்குழல்‌ இசையால்‌ மக்களை பரவசத்தில்‌ ஆழ்த்தினார்‌.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கலைகளை பறைச்சாற்றும்‌ 'யக்‌ஷா' கலை திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில்‌ நடைபெற்று வருகிறது. இரண்டாம்‌ நாளான இன்று (பிப்‌.16) பிரபல புல்லாங்குழல்‌ இசை கலைஞர்‌ சஷாங்க்‌ சுப்ரமணியத்தின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த அற்புதமான நிகழ்ச்சியில்‌ அவர்‌ தனது இனிய குழல்‌ இசையால்‌ மக்களை மகிழ்வித்தார்‌. அவருடன்‌ பத்ரி சதீஷ்‌ குமார்‌ மிருதங்கமும்‌, கிரீதர்‌ உடுப்பா கடமும்‌ இசைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள்‌ மற்றும்‌ நாடுகளைச்‌ சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்‌ கண்டு ரசித்தனர்‌.

சஷாங்க்‌‌ குடியரசு தலைவரிடம்‌ இருந்து சங்கீத்‌ நாடக அகாடமி விருது, பிரான்ஸ்‌ நாட்டின்‌ செவாலியே விருது, தமிழக அரசின்‌ கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள்‌ மற்றும்‌ பாராட்டுக்களை பெற்றவர்.

'யக்‌ஷா' திருவிழாவின்‌ நிறைவு நாளான நாளை (பிப்.17) மாதவி முத்கல்‌ குழுவினரின்‌ ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள்‌ கூர்யகுண்டம்‌ மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெற உள்ளது.‌ இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...