ஈரோட்டில் படுகர் நடனமாடி அதிமுக எம்.எல்.ஏ., கே.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு - வைரல் வீடியோ

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச் சேகரிக்கச் சென்ற உடுமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் படுகர் இன நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஈரோடு: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கப்பச்சி வினோத் குமார் மற்றும் தேனாடு லட்சுமணன் ஆகியோருடன் ஈரோடு தொகுதி பிரச்சாரத்தின்போது எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் படுகர் இன நடனமாடிய வாக்கு சேகரித்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...