தாராபுரம் கோயில் திருவிழாவில் வள்ளிகும்மி ஆட்டம் - கண்டு ரசித்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்ன காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள சின்ன காளியம்மன் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆண்டுத் திருவிழாவையொட்டி, அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து கரகாட்டத்துடன் பக்தர்கள் தீர்த்த குடத்தை தென்தாரை சின்ன காளியம்மன் கோயில் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். கோயில் முன்பு வைத்து பூமாலை சூடினார்.



பின்னர் பூஜைகள் செய்யப்பட்டன.



இதைத்தொடர்ந்து. கோவை கலை வள்ளிகும்மி ஆட்ட கலைஞர்களின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வள்ளி கும்மியாட்டக் கலைஞர்கள் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை மற்றும் காளியம்மனுக்கு பாடல்கள் பாடி வள்ளி கும்மியாட்டத்திற்கே உரித்தான பாணியில் உடல் அசைத்து கைகள் தட்டி பாட்டு பாடி கும்மி அடித்தனர்.



இதனை, சின்ன காளியம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.



அழிந்து வரும் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, திருப்பூர் மாவட்டம் பகுதியில் பல்வேறு கோயில் திருவிழாக்களில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...