பேருந்தில் தவறாக ரூ.500 அபராதம் வசூலித்த வழக்கு - ஊட்டி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் தீர்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு பேருந்தில் பயணியிடம் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி 500 ரூபாய் தவறுதலாக அபராதம் வசூலிக்கபட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பயணி சேகர் என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.



நீலகிரி: உதகை பர்ன்ஹில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி கோவையிலிருந்து அரசு பேருந்தில் உதகைக்கு வந்தார். சேரிங்கிராஸ் பகுதியில் அந்த பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் டிக்கெட் வாங்கி சோதனை செய்தார். அப்போது, சேகர் தனது டிக்கெட்டை பையில் தேடி எடுக்க தாமதம் ஆகியுள்ளது.



இதனையடுத்து, பயணியான சேகர் டிக்கெட்வாங்கவில்லை என்று கூறி டிக்கெட் பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சேகர், உதகையில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இதனை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்ட சேகரிடம் வசூலிக்கபட்ட 500 ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற செலவாக 3 ஆயிரத்தையும் மன உளைச்சல் அடைந்ததால் 25 ஆயிரம் ரூபாயையும் நஷ்ட ஈடாகவும் வழங்குமாறு நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழக மேலாளருக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...