கோவை தெற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 91-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர், சத்யா நகர் மற்றும் ராமானுஜர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராசி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவதையும் பார்வையிட்டார்.



தொடர்ந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த க.விஜயகார்த்திகேயன் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 



இதைத்தொடர்ந்து, முத்தண்ணன் குளத்தின் வழியாக செல்லும் சிறுவாணி பிரதான குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும், அதேப் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தையும், குனியமுத்தூர், சத்யா நகர் மற்றும் ராமானுஜர் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாய்கால்களுக்கு ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...