உடுமலையில் இருந்து ஊட்டிக்கு அரசுப்பேருந்து சேவை - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு, உடுமலையில் இருந்து திருப்பூருக்கு செல்ல அதிக பேருந்துகள் இயக்க வேண்டும், இரவு நேரங்களிலும், குறிப்பிட்ட இடை வெளியில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



அவ்வகையில், உடுமலையில் இருந்து திருப்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்து சேவையும் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், உடுமலை திருப்பூர் வழித்தடத்தில், அதிக கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், அனைத்து நிறுத்தங்களிலும் விரைவு பேருந்துகள் நின்று செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், போதி அளவு பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை.

உடுமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து காலை, 9:40 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர், அவிநாசி வழியாக ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், முன்னறிவிப்பின்றி பேருந்து சேவை நிறுத்தப்படுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, திருப்பூருக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...