உடுமலையில் சிறு குறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்

திருபபூர் மாவட்டம் உடுமலையில் நடந்த சிறுகுறு தொழிலுக்கான கடன் முகாமில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விண்ணப்பங்களை அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிறு குறு தொழிலுக்கான கடன் வழங்கும் முகாம் வியாபாரிகள் சங்க அரங்கில் நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் பால்நாகமாணிக்கம் முகாமிற்கு தலைமை வகித்தார். வியாபாரிகள் சங்க பொருளாளர் மெஞ்ஞான மூர்த்தி வரவேற்றார்.



நிகழ்ச்சியில் பேசிய வியாபாரிகள் சங்க செயலாளர் எஸ்.குமரன், கடன் கேட்டு விண்ணப்பவர்களுக்கு தெரியாத விவரங்களை தெளிவுபடுத்தி உரிய வழிகாட்டுதல் வழங்கி வங்கி அதிகாரிகள் தாமதம் இன்றி கடன் வழங்க வேண்டும் என்றார்.



இந்த கடன் வழங்கும் முகாமிற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் செய்து இருந்தார். இந்த முகாமில், உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...