உடுமலை மண்ணின் பெருமைகளோடு நகராட்சி லோகா - நகர்மன்ற கூட்டத்தில் வெளியீடு!

உடுமலை நகராட்சி லோகோவில் மாரியம்மன் கோவில் தேர், உடுமலை நகராட்சி தாகூர் கட்டிடம் மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை மக்களுக்கு கைகொடுத்துவரும் வேளாண்மை, காற்றாலை போன்றவை இடம்பெற்றுள்ளன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்கான (லோகோ) வெளியிடப்பட்டது. நகர்மன்ற கூட்டம் உடுமலை நகராட்சியின் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சத்தியநாதன், துணைத் தலைவர் கலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்தக் கூட்டத்தில், குட்டை திடலில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமையவுள்ள அண்ணா கலையரங்கத்துக்கான செலவினத்தை வருவாய் நிதியில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 148 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், 33-வது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள ஐ.எம்.ஏ ஹால் இடத்தை மீட்டு நகராட்சி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் மத்தீன் உறுதியளித்தார்.



லோகோ வெளியீடு

1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த உடுமலை நகராட்சியின் பெருமைகளை விளக்கும் வகையிலான லோகோ வெளியிடப்பட்டது. இந்த லோகோவில் உடுமலை மண்ணின் பெருமையை விளக்கும் வகையிலான மாரியம்மன் கோவில் தேர், உடுமலை நகராட்சி தாகூர் கட்டிடம் மற்றும் திருமூர்த்தி அணை ஆகியவை இடம் பெற்றுள்ளது.

அத்துடன், உடுமலை மக்களுக்கு கைகொடுத்துவரும் வேளாண்மை, காற்றாலை ஆகியவையும் இந்த லோகோவில் இடம் பிடித்திருந்தது. இதனைச்சுற்றி புத்தகங்களால் வளையம் அமைத்து கல்வியின் பெருமையை பறைசாற்றும் விதமாக லோகோ உருவாக்கப்பட்டிருப்பது அனைவரையும் கவர்வதாக இருந்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...