பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மதுபான கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் அமையவுள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மதுபான கூடம் அமைய உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மற்றும் LIC காலனி, குமரன் வீதி, மாரியம்மாள் லே - அவுட் குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிகளவில் குடியிருப்புகளும் உள்ளது. எனவே மதுபான கடை அமைந்தால், மாண-மாணவிகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

இதைக் கருத்தில் கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் இந்த பகுதியில் மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும், எதிர்ப்பை மீறி மதுபானக்கூடும் தொடங்கினால் போராட்டங்கள் நடத்தப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...