கோவையில் வாத்தி படம் ரிலீஸ் - தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்!

வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில், கோவை துடியலூர் முருகன் தியேட்டரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் இசைக்க உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் மேள தாளங்கள் முழுங்க பேனர்களை, வைத்து திருவிழா போல் கோலமாக கொண்டாடினர்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று வெளியானது. முழுமையாக பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்ப சூழ்நிலைகளை எடுத்துரைக்கும் விதமாகத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகி உள்ளது.



இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் உள்ள முருகன் தியேட்டரில் வாத்தி திரைப்படம் வெளியானது.



முன்னதாக கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம் வளாகத்தில் 60 அடி பேனர்களை வைத்தும் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடன் திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...