தாராபுரம் அருகே அலங்கியம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

அலங்கியம் நெடுஞ்சாலையில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்டடோர் கோட்ட பொறியாளர் ராணியிடம் மனு.


திருப்பூர்: தாராபுரம் நெடுஞ்சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் ராணியை சந்தித்து வேகத்தடை அமைத்துத் தரக்கோரி மனு கொடுத்தனர்.



அந்த மனுவில், அலங்கியம் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில், உள்ள காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நியாயவிலைக்கடை, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் நியாயவிலைக்கடை பகுதியில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்ட பொறியாளர் ராணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...