'எங்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்..!' - திருப்பூர் மணல் லாரி உரிமையாளர்கள் வேதனை!

லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் கேட்கும் மர்ம கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விட்டால் ஓரிரு நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக திருப்பூர் தெற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.



திருப்பூர்: மணல் லாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக திருப்பூர் தெற்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர், குண்டடம், தாராபுரம், அவிநாசிபாளையம், பெருந்தொழுவு ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. கிராவல் மண், மணல் எம்சாண்ட் ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்களை புதுக்கோட்டையைச் சேர்ந்த சிலர் மிரட்டி, யூனிட் ஒன்றுக்கு 400 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், கொடுக்காவிட்டால் அதிகாரிகளை வைத்து லாரிகளை பறிமுதல் செய்வோம் என மிரட்டுவதாக கடந்த இரண்டு வருடங்களாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.



இந்நிலையில் நேற்று குண்டடம் அருகே வேங்கிபாளையம் கிராமத்தை சேர்ந்த லோகு என்பவர் தனது விவசாய நிலத்தினை சமன்படுத்த கிராவல் மண் எடுத்த போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களை மடக்கிப் பிடித்த விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் அந்த கும்பலின் காரை பரிசோதனை செய்ததில் அரிவாள் மற்றும் உருட்டுகட்டைகளோடு வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து ஊதியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆயுதங்களோடு வந்த ஆறு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களின் அட்டூழியத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொடுவாயில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் முடிவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாக பணம் கேட்டு மிரட்டும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கும்பல் மீது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும், கனிமவள சட்டப்படி யூனிட் ஒன்றுக்கு 400 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என சட்டம் ஏதாவது உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும்,



தொடர்ச்சியாக லாரி உரிமையாளர்களை மிரட்டி வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஓரிரு நாட்களில் லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி தருமாறு லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...