கூடலூர் அருகே வனப்பகுதியில் திடீர் தீ - 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 10 ஏக்கர் பரப்பிலான செடி, கொடிகள் எரிந்து நாசம்.



நீலகிரி: கூடலூர் அருகே நாடு காணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது.



நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி காரணமாக வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் வறண்டு வருகின்றன. இதனால் கடும் வறட்சி நிலவ தொடங்கி உள்ள நிலையில் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் சுமார் 10 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமானது.



இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்கார வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனையும் கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



காட்டு தீ ஏற்பட்ட இடத்தில் டெட்டனேட்டர் குச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் கோட்ட உதவி வன அலுவலர் கருப்பையா மற்றும் தேவாலா போலிசார் டெட்டனேட்டர் குச்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டெட்டனேட்டர் குச்சிகள் வெப்பத்தினால் தீ பற்றிய போது காட்டு தீ ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...