கோவையில் போலி வங்கி ரசீது கொடுத்து இருசக்கர வாகனம் வாங்கிய இளைஞருக்கு வலைவீச்சு

கோவை போத்தனூரை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் ஆன்லைனில் தனது இருசக்கர வாகனத்தை விற்க நினைத்த போது, வங்கி ஊழியர் என அறிமுகமான ரமேஷ், பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாகப் போலி ரசீது தந்து ஏமாற்றிய சம்பவத்தால் பரபரப்பு.


கோவை: இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட்டதாகக் கூறி ஏமாற்றிய நபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூரில் வசிப்பவர் முகமது ரபீக். இவர் மொபைல் ஷாப் நடத்தி வருகின்றார். தனது இருசக்கர வாகனத்தை விற்க olx இணைய தளத்தில் விளம்பரம் தந்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரமேஷ் என்ற நபர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி, வாகனம் தேவைப்படுவதாக ஃபோனில் அழைத்துள்ளார்.

வெரைட்டி ஹால் பகுதிக்கு வண்டியைக் கொண்டு வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த, அந்த நபரின் பேச்சைக் கேட்டு, முகமது ரபீக் தனது இருசக்கர வாகனத்துடன் வெரைட்டி ஹால் ரோடு பகுதிக்குச் சென்றிருக்கின்றார். இருசக்கர வாகனத்தைப் பரிசோதித்த ரமேஷ், வாகனம் நன்றாக உள்ளது, அதனை வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக 98,000 ரூபாய்க்கு வாகனத்தை வாங்கிக் கொள்வதற்காக ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் ரொக்கமாகத் தர முடியாது, வங்கிக் கணக்கிலேயே பணத்தைச் செலுத்தி விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பி முகமது ரபீக், ரமேஷ் அழைத்த வங்கிக்கு சென்றிருக்கின்றார் . அப்போது வங்கிக்கு வெளியே முகமது ரபீக்கை நிறுத்தி விட்டு வங்கிக்கு உள்ளே சென்ற ரமேஷ், பணம் கட்டியதற்கான ரசீதை எடுத்து வந்து முகமது ரபீக்கிடம் தந்திருக்கின்றார்.

வங்கிகணக்கில் பணம் வந்துவிட்டதாக எண்ணி முகமது ரபீக், ரசீதை பெற்றுக்கொண்டு, இருசக்கர வாகனத்தை ரமேஷிடம் ஒப்படைத்திருக்கிறார். வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். பிறகு அந்த ரசீதை கொண்டு வங்கியில் தனது கணக்கைச் சரிபார்க்கச் சென்ற போது முகமது ரபீக்-க்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த நிலையில் வங்கி மேலாளரிடம் கேட்டபோது, இது போலி ரசீது என்று தெரிவித்துள்ளார். போலியாக வங்கி ரசீது கொடுத்து ஏமாற்றியதை உணர்ந்த முகமது ரபீக் இது தொடர்பாக வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்துடன் தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...