குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய மிளகு - அறுவை சிகிச்சையின்றி அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

மூச்சுக்குழாயில் மிளகு சிக்கியதால், மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, அறுவை சிகிச்சை இல்லாமல் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன முறையில் பாதுகாப்பாக மிளகை அகற்றி உயிரை காப்பாற்றினர்.


கோவை: திருப்பூரைச் சேர்ந்த 1 வயது 4 மாத ஆண் குழந்தை திடீரென்று மூச்சு திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. சி.டி.ஸ்கேனில் அந்த குழந்தையின் மூச்சு குழாயில் அயல்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக உள் நோக்கி குழாய் செலுத்தி சோதித்துப் பார்த்தபொழுது மூச்சுக் குழாயில் மிளகு சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உள்நோக்குக் கருவி மூலம் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த மிளகு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

இந்த சிகிச்சையினை காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் டாக்டர் சரவணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் பேராசிரியர் டாக்டர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டனர்.

உரிய நேரத்தில் மருத்துவர்கள் அளித்த சரியான சிகிச்சையால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டதாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...