பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - வாக்குவாதத்தால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து வட்டாட்சியர் அலுவலகத்தை துத்தேரிபாளையம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தேரிபாளையம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரின் அருகில் 33 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு இடம் அமைந்துள்ளது.

நீர்நிலை புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமித்து 63 குடும்பங்கள் வீடு கட்டியுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் கிராம மக்களுக்கு அறிவிப்பாணை வழங்கப்பட்டது.

200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாது என கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும் எனக்கூறி இரவில் அறிவிப்பாணை வழங்க வந்துள்ளார். அவரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பல்லடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.



இதுகுறித்து நேற்று பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் எம் ஆனந்தன் கிராம மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதைதொடர்ந்து இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த கிராம‌மக்கள் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாச்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



கிராம மக்களை சமாதானப்படுத்திய வட்டாட்சியர் நந்தகோபால், கோரிக்கையை மனுவாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 200 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த கிராமத்தை விட்டு வெளியே போகச்சொன்னால் நாங்கள் எங்கே செல்வது? எனவும் எங்களுக்கு பட்டா கூட வேண்டாம், இருக்கும் இடத்தில் வாழ விடுங்கள் என கிராம மக்கள் வட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும். தற்பொழுது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படும் இடமானது மந்தைவெளி புறம்போக்காக வருவாய்த்துறை மாற்றம் செய்யாமல் உள்ளது எனவும் வருவாய்த்துறை மீண்டும் எங்கள் கிராமத்தை ஆய்வு செய்து நீர்நிலை புறம்போக்கு என்று சொல்லப்படும் இடத்தினை மந்தைவெளி புறம்போக்காக வகைப்பாடு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், ஐந்து கோவில்கள், மத்திய மாநில அரசின் திட்டங்கள் என அனைத்தும் இங்கு செயல்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், காலங்காலமாக இங்கேயே வசித்து வரும் எங்களுக்கு மட்டும் இடம் இல்லையா? என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...