பல்லடம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

பல்லடம் அருகே உகாயனூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து வேனில் வீடு திரும்பியபோது மாதப்பூரில் விபத்துக்குள்ளானது. விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களோடு பள்ளி முடிந்ததும் வாடகை வேனில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த வேனை நாகராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். வேன் மாதப்பூர் வந்த போது எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறினர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.



இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தைப் பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...