கோவை துடியலூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

கோவை துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திவான், நடராஜ், முத்துகுமார் என 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 34 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.


கோவை: துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துடியலூர், அப்பநாய்க்கன்பாளையம், சுப்ரமணியம்பாளையம், கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.



இதனை அடுத்து தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற திவான்(20), நடராஜ்(55) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கருங்கடலைச் சேர்ந்த முத்துகுமார்(31) என்பதும், அவர்கள் பல இடங்களில் வீடு புகுந்து நகைகள் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...