உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் - 62 பேர் கைது

உடுமலை மின்வாரிய மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உடுமலை மின் வட்டக்கிளை சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகியோர் மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசினர்.

இதில், மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், காலியாக உள்ள களப்பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தால் உடுமலை-திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...