வால்பாறையில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

வால்பாறை புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி, சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்திப் பணி நடைபெற்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறை புதுதோட்டம் பகுதியில் சாலை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகள் பழுதடைந்ததால், நீண்ட நாளாக நெடுஞ்சாலைத் துறை சார்பில், அழியார் பகுதியிலிருந்து சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக புதுதோட்டம் பகுதியிலிருந்து டவுன் பகுதி வரை தார்ச்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்றது.



சாலையின் ஒரு பக்கத்தில் வாகனங்களை நிறுத்தி, தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானது. சிறிது நேரத்தில் போக்குவரத்தைச் சரிசெய்த பின், மீண்டும் சாலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...