ஊட்டி அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு!

அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உதகையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் அத்துறை அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு கலந்து கொண்டார்.



இதில் பள்ளிக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் காலை உணவுத்திட்டம் குறித்தும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதுமைப்பெண் திட்டம் செயல்பாடுகள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள குழந்தை இல்லங்கள் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012, குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, ஊட்டி வட்டாரத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களுக்குச் சென்று ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் குறித்தும், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலும் ஆய்வு

மேற்கொண்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோல்டிசாராள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...