கோடையின் தாக்கம் எதிரொலி - வேகமாகச் சரியும் அமராவதி அணை நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில், காலை நிலவரப்படி 63.78 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து, 300 அடி நீர் வெளியேற்றபட்டுவருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 53,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணா டிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத் தொழுவு ஆகிய பகுதியில் 7,520 ஏக்கர் நிலங்களுக்கு இரண்டாம் பருவ நெல் சாகுபடிக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.



அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களின் பாசனப்பகுதிகளும் கட்டுப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தாலுகாவில், அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் நீர் திறக்கப்பட்ட நிலையில், வரும் 28ம் தேதிவரை நீர் வழங்கும் வகையில் பாசன காலம் நீடிக்கப்பட்டுள்ளது.



அதேபோல், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கும், வரும் 28 வரை பாசன காலம் நீடிக்கப்பட்டது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வெயில் காரணமாக, வறட்சி ஏற்பட்டுள்ளது.

கோடையின் தாக்கம் அதிகரித்து, அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில், அணையிலிருந்து பாசன நீர் வழங்கப்பட்டிருந்தது. அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில், காலை நிலவரப்படி 63.78 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து, 300 அடி நீர் வெளியேற்றபட்டுவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...