கொழிக்கும் வருமானம் எதிரொலி- கோவை நெல்லை இடையே வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு!

மக்களிடையே பெரிய வரவேற்பு இருப்பதால் கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டுவரும் வாராந்திர ரயில் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஏழை, எளிய மக்களின் அதிகபட்ச ஆடம்பர பயணமாக பார்க்கப்படுவது ரயில் பயணம். பொழுதுபோக்கு அம்சங்களில் பேருந்துக்கு நிகராக ரயில் சேவையை அதிக பயணிகள் விரும்புகின்றனர். இந்த நிலையில், கோயமுத்தூரிலிருந்து தென்மாவட்டங்களான மதுரை, நெல்லை பகுதிகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் ரயிலை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது மேட்டுபாளையம் முதல் நெல்லை வரையிலான வாராந்திர ரயில் சேவை. மேட்டுப்பாளையம் - கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் மதுரை,சிவகாசி,தென்காசி வழியாக நெல்லைக்கு இந்த வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, நெல்லையிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் ரயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.



ரத்தான ரயில் சேவை - மக்களின் போராட்டத்தால் மீண்டும் இயக்கம்

இந்த நிலையில் தென்மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாக இருந்த மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் சேவை லாபத்துடன் இயக்கப்பட்டு வந்தது. 70 % பயணிகள் ரயிலில் அப்போது பயணம் செய்து ரயில் சேவையை நுகர்ந்திருக்கின்றனர். இந்த நிலையிலே, ஓரளவுக்கு லாபமுடன் இயங்கி வந்த மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் சேவையானது திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கண்டன குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து தென்மாவட்ட பயணிகள் , பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று ரயில் சேவை ஆரம்பமானது.

கொட்டுது பண மழை..நீண்டது ரயில் சேவை..!

கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் 5 மாதங்களில் 1.56 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், வாராந்திர சேவையை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



இது குறித்து சமூக ஆர்வலர்கள் என்ன சொல்கின்றனர் ?

இந்த சிறப்பு ரயில்களுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா ஆர்.டி.ஐயில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தென்னக ரயில்வே அளித்த பதிலில், பயணிகள் எண்ணிக்கை குறித்து புள்ளி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் 15,189 பயணிகளுடன் 69.5 லட்சம் வருமானமும் 83.79 சதவீத பயன்பாடும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் 18,978 பயணிகளுடன் 86.54 லட்சம் வருமானமும் 100.56 சதவீத பயன்பாடும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 22 சேவைகள் இயக்கப்பட்ட இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவையால், ரூ.1.56 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வருமானம் கொழிக்கும் இந்த வாராந்திர சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், வரும் ஏப்ரல் 06 முதல் ஜூன் 29 வரை 3 மாதங்களுக்கு ரயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், வியாழக்கிழமைதோறும் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே, தென்காசி மதுரை திண்டுக்கல் பழநி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்துக்கும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சேவையை தற்போது 3 மாதம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சேவையை நிரந்தர சேவையாக அறிவிக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...