கோடை வெப்பம் அதிகரிப்பு - உடுமலையில் மண்பானை விற்பனை அமோகம்

உடுமலையில் கூஜா, ஜாடி, உருண்டை வடிவ பழைய செம்பு, பானை வடிவத்திலான மண்பானை, குழாய் பொருத்திய மண்பானை விற்பனை. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு மற்றும் வடிவம் அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், குடிநீரை குளிர்ச்சியாக குடிக்க விரும்பும் பொதுமக்கள், தற்போது மண்பானைகளை அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதனால், மண்பானைகளின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



இந்த தண்ணீர் பானைகள் கூஜா, ஜாடி, உருண்டை வடிவ பழைய செம்பு, பானை வடிவத்திலான மண்பானை, குழாய் பொருத்திய மண்பானை என பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள், வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.



இது குறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு என மக்கள் அதிக அளவில் மண்பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு 100 பானைகள் விற்பனையாகிறது. இதனால் வருமானமும் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...