குடியரசு தலைவர் வருகையால் உச்சகட்ட பாதுகாப்பில் கோவை - 6,900 போலீசார் குவிப்பு!

கோவை ஈஷா மையத்தில் இன்று நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 6,900 போலீசார் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா இன்று நடைபெற உள்ளது.

இதையொட்டி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அங்கு உள்ள ஆதியோகி சிலை முன்பு மஹா சிவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, தியானங்கள், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரிய கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சி என விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இந்த மகா சிவராத்திரி விழாவில் தலைமை அழைப்பாளராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வரும் அவர், பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். இரவு மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.

தொடர்ந்து நாளை காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இதனிடையே குடியரசு தலைவர் செல்லும் பாதைகள் குறித்து திட்டமிடப்பட்டு, பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த நிலையில் குடியரசு தலைவர் வருகையால் கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகரில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 8 எஸ்.பி, 36 ஏ.டி.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி, 100 இன்ஸ்பெக்டர்கள், 250 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,772 போலீசார் மாநகரில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதேபோல், புறநகரை பொறுத்தவரையில் 1 ஐ.ஜி., 2 டி.ஐ.ஜி , 9 எஸ்.பி, 110 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4,200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். பாதுகாப்பு பணிக்காக மற்ற மாவட்ட போலிசாரும் வரவழைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தலைவரின் கோவை வருகையையொட்டி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் மொத்தம் 6,900க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...