கோவை வேளாண் பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடிய டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் அறிஞர் அண்ணா நிர்வாக வளாகத்தில் மாணவர் நல மையம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் டிஜிபி சைலேந்திரபாபு பகிர்ந்து கொண்டார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் அவர்களது கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அவை அனைத்திற்கும் சைலேந்திரபாபு பதிலளித்தார். கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது மாணவர்கள் அவருடன் புகைபடங்கள் எடுத்து கொண்டனர்.

அப்போது பாதுகாவலர்கள் மாணவர்களை தடுத்த போதிலும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்ட பின்னரே புறப்பட்டார்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...