உடுமலை அருகே மஹா சிவராத்திரி திருச்சப்பர ஊர்வலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற திருசப்பர ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், மஹா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று முன்னோர்கள் அறிவுரையின் பேரில் பூலாங்கிணர் கிராமத்தில், பாரம்பரிய முறையில், திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலூர் கிருஷ்ணாபுரம், வாளவாடி வழியாகத் திருச்சப்பர ஊர்வலம் நடைபெற்றது. இதில், கிராம மக்கள், வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், பழ வகைகள், விவசாய விளை பொருட்கள் வீசியும், மண்டக படி அமைத்துச் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.



இதேபோல், வாளவாடியில் நடைபெற்ற திருசப்பர சிறப்பு பூஜையில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் திருமூர்த்திமலைக்கு திருச்சப்பரம் சென்ற நிலையில் சிறப்புப் பூஜை முதல் கால யாகப் பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...