மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக தோல் தானம் - மருத்துவர்கள் சாதனை!

மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக தோல் தானம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உயிரிழந்த நபரின் தோல் தானமாக பெறப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (31). இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.



இதனையடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த நாகராஜ் உடலில் இருந்து தோல் மற்றும் கண்களை தானம் செய்ய அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார்.



இந்நிலையில் கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உடல் உறுப்புகளை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் எடுத்து செல்ல கூடிய பெட்டிகளுடன் வந்த மருத்துவர்கள் நாகராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

நாகராஜின் உடலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தோல் தீக்காயம் ஏற்பட்டு தோல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உருவாகிய 138 ஆண்டுகளில் இதுவரை தோல்தானம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...