கோவைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை - ஆளுநர், அமைச்சர், டிஜிபி வரவேற்பு!

கோவை ஈஷாவில் இன்று நடைபெறவுள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



கோவை: கோவைக்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர், அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.



இதற்காக இன்று பிற்பகல் விமானம் மூலம் அவர் கோவைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அவர், ஓய்வு எடுப்பதற்காக அவினாசி சாலையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை 6 மணியளவில் அவர், கார் மூலம் ஈஷா யோகா மையத்திற்கு சென்று மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் 6,900 போலீசார் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...