மேட்டுப்பாளையம் அடுத்த கணுவாய்பாளையம் பிரிவில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கணுவாய்பாளையம் பிரிவு பகுதியில் ஏற்கனவே உள்ள நிழற்குடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள நிலையில், புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள கணுவாய்பாளையம் பிரிவு பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகேயுள்ள கணுவாய்பாளையம் பிரிவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஏற்கனவே நிழற்குடை ஒன்று உள்ளது. இதில் மர்ம நபர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதியில் இருந்து பேருந்துக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் சாலை ஓரங்களிலேயே நின்றபடி பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் உள்ளது.

காரமடை - தோலம்பாளையம் சாலை தமிழக - கேரள மாநிலங்களை இணைக்கும் சாலையாகவும் இருப்பதால் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் சாலையோரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும், மழை, வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு இடமும் இல்லை என்றும், விபத்துகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் பாதுகாப்புக்காக பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...