பீட்ரூட்டுக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை அருகே சீதோஷ்ண நிலை மற்றும் இடைத்தர்கள் காரணமாக பீட்ரூட் விலை குறைந்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் நிலையான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பீட்ரூட்க்கு நிலையான விலை கிடைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.



உடுமலை மற்றும் குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிணற்று பாசனத்தில் பீட்ரூட் பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகை சீசனில், கிலோ, 30 ரூபாய் வரை பீட்ரூட் கொள்முதல் செய்யப்பட்டது.



ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால், விலை வேகமாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக, விலை கிலோ, 10 ரூபாய்க்கும் குறைவாக விலை போகிறது.

சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, காய்கறிகளின் நுகர்வு குறைந்து, வரத்து அதிகரித்துள்ளதே விலை சரிவிற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்சமயம் சீதோஷ்ண நிலை காரணமாகவும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் காரணமாகவும், பீட்ரூட் விலை கடுமையாக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...