பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழா - 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் 3,000-கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழாவில் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பல்லடம் அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபடி நவகிரக கோட்டையில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



மாலை 6 மணிக்கு கோ பூஜை, முதற்கால வேள்வி, மகா அபிஷேகம், மகா தீபாராதனை சிவன் - பார்வதி திருக்கல்யாண நிகழ்வுடன் தொடங்கியது.



இந்நிலையில், ஐந்து கால வேள்வி பஜனை, ஞான குருவின் சத்சங்கம் சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் முழு இரவு பிராத்தனைகளோடு காலை 6 மணி வரை சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் குழந்தைகள் சிவபெருமான் பார்வதி வேடம் அணிந்து பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அதிகாலை 6:00 மணி அளவில் ஐந்தாம் கால வேள்வி சிவபெருமான் மகாபலி அம்மையப்பர் திருவீதி உலா ரோடு சிவராத்திரி திருவிழா நிறைவடைந்தது.



இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...