மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து!

குன்னூர் அடுத்த காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வெலிங்டன் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை கல்லூரியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருந்த குடியரசு தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.


நீலகிரி: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் குன்னூர் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்று கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10:30 மணிக்கு வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதனிடையே குன்னூர் காட்டேரி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிற்பகல் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் டெல்லி செல்ல உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...