கோவை வெள்ளலூரில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்ற இளைஞர் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (25). இவர் பி.எஸ்.சி ஐ.டி படித்துவிட்டு சரியான வேலை இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். வேலையில்லாத சூழலில் மோகன் குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்கி அடிமையாகியுள்ளார்.

தொடர்ந்து செல்போனை பார்த்து விளையாடி வந்ததால் இளைஞர் மோகன் குமாருக்கு நீண்ட நாட்களாக தலைவலி மற்றும் பார்வை குறைபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வந்த அவர், நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஏற்கனவே பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோவையில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...