தொழில்துறையில் ரோபோட்டிக் டெக்னாலஜி - ஆர்வம் காட்டும் கோவை மாவட்ட தொழில்துறையினர்

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளை போல் ரோபோட்டிக் டெக்னாலஜியை தொழில் துறையில் புகுத்த கோவை மாவட்ட தொழில்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அதிக உற்பத்தி, ஆள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் எனவும் நம்பிக்கை.


கோவை: ஜப்பான், கொரியா, டென்மார்க் நாடுகளை போன்று நவீன தொழில்நுட்பத்தை கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் நாடி வருகின்றன.

தேசிய அளவில் சிறு, குறு தொழில் உட்பட அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழகத்தில் மட்டும் 16.6 விழுக்காடு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இதில் கோவையில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடிசை தொழில் சிறு, குறு, பெரு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஒருபுறம் மூலப் பொருட்களில் விலை ஏற்றம் ஆர்டர்கள் குறைவு போன்றவை இருந்தாலும் மறுபுறம் கம்பெனியில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறையும் இருக்கின்றன.

வேலை ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் விதமாகவும் உயர்தரமான பொருட்களை தயாரிக்கவும், குறைந்த நேரத்தில் அதிக பொருட்களை தயாரிக்கும் விதமாகவும் புதிய தொழில்நுட்பத்தை தொழில்துறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து நாம், கோ இண்டியா தலைவரும், டெக்கான் பம்ப் நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் அவர்களிடம் நாம் பேசினோம். அப்போது பல்வேறு விடயங்கள் நமக்கு தெரியவந்தன.

அதன் அடிப்படையில் கோவையில் உள்ள பம்பு செட் மின் மோட்டார் டெக்ஸ்டைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு இன்ஜினியரிங் சார்ந்த தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மெஷின்களில் உலக தரத்தை நிறுவ திட்டமிட்டு இருக்கின்றனர்.

குறிப்பாக ஜப்பான், கொரியா, டென்மார்க் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ரோபோடிக் டெக்னாலஜி முறையை கோயம்புத்தூர் தொழில் நிறுவனங்களில் கொண்டு வர கோ இந்தியா அமைப்பினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியை செய்யும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தொழில்துறையில் ரோபோட்டின் பயன்பாடுகள் குறித்தும் அறிய திட்டம் தீட்டி வருகின்றனர்.

*தரம் ... தலைமுறைக்கும் ... ரோபோடிக் பணியின் மகிமை*

ரோபோடிக் மூலம் தொழிற்சாலைகளில் பணிகள் நடைபெறும் பொழுது தொழில்துறைக்கு பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கின்றன . ரோபோட்டிக் மூலம் பொருட்களை வேகமாக தயாரிக்க முடியும். அதிக ஆர்டர்களை பெற்று அதிக உறுப்பத்தி செய்து போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு சிறந்து விளங்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

தரம் தலைமுறைக்கும் என்று சொல்வது போல நீடித்து உழைக்கும் தரமான பொருட்களை தயார் செய்து சென்சார் மூலம் குவாலிட்டி செக்கிங் செய்ய முடியும். இதனால் உலக தரத்திலான தயாரிப்புகளை கோவையிலிருந்து தயாரிக்க முடியும் என்பது தொழில் துறையினரின் கூற்று.

இந்த நிலையில் தொழிற்சாலைகளில் சிறு சிறு வேலைகளை ரோபோட்டுகள் மூலம் செல்வதால் கடை நிலை பணிகள் தொய்வின்றி நடக்கும் என்பது தொழில்துறையினரின் நம்பிக்கை.

காலத்துக்கு ஏற்றார் போல நாமும் மாற வேண்டும் என்பதன் அடிப்படையில் நவீன உலகில் நவீன தொழில்நுட்பத்தை உட்பகுத்தி தொழில் துறையை மேம்படுத்த கோயம்புத்தூர் தொழில்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருவது ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...