பொது பயன்பாட்டு இடத்திலிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் - உடுமலை நகராட்சி அதிரடி

உடுமலை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பொது பயன்பாட்டு நிலத்தை, ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டது.

உடுமலை நகராட்சியில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படும் போது பூங்கா, நூலகம் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அளவிலான இடம் நகராட்சிக்கு ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு ஒதுக்கப்படும் இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சொந்தப் பயன்பாட்டில் உள்ள இடங்கள் மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்காத இடங்கள் போன்றவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் கல்யாணி அம்மாள் லே அவுட் பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் உடுமலை நகராட்சியின் 2வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் பல லட்சம் மதிப்பிலான இடம் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள், பொக்லைன் மற்றும் ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

உடுமலை நகராட்சியின் தொடர் நில மீட்பு நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...