தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் உள் மாவட்டங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலையும், உள் மாவட்டங்களில் லேசான பணி மூட்டமும் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் உள் மாவட்டங்களில் லேசான பணி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

வருகின்ற 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த வெப்பநிலை 22 செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 35.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...