ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உடல்நலம் பாதிப்பு - கோவையில் வாலிபர் தற்கொலை!

கோவை வெள்ளலூர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் குணமாகாததால், விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வெள்ளலூர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் அடுத்த கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (25). தந்தையை இழந்த இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். இவரது தாயார் நாகலட்சுமி கூலித்தொழிலாளி ஆவார். மதன்குமார் இளங்கலை மென்பொருள் பட்டப் படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருந்திருக்கின்றார். இந்நிலையில் இவர் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் நாளடைவில் மதன்குமாருக்கு கடுமையான கழுத்து வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதற்குச் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.வீட்டில் தனியாக இருந்த மதன்குமார் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் மதன்குமார் தாயார் வேலைக்குச் சென்றவுடன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...