தாராபுரம் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், ஆற்றில் முதலை உலா வருவதால் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அமராவதி ஆற்றங்கரையோரம் கட்டியிருந்த தனது மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்துள்ளது.

முதலையைப் பார்த்த அவர், பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் வந்து பார்த்த போது முதலை இல்லை. இந்நிலையில் அவரை தொடர்ந்து ஆற்றங்கரைக்குச் சென்ற சிலர், முதலை நீரில் நீந்துவதைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனே காங்கேயம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், முதலை உலா வருவதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் முதலையை உடனடியாக பிடிக்க கோரி கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...