உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கொடியேற்றும் விழா!

உடுமலை அருகேயுள்ள வேலூர் ஊராட்சியில் இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்கம் கொடியேற்று விழா நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆர்.வேலூர் ஊராட்சியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின், இந்திய தொழிற்சங்க சம்மேளனம் சார்பில் கட்டிட தொழிலாளர் சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், துணைத் தலைவர் பாபு, துணைச் செயலாளர் சிவக்குமார், தலைவர் மகேஷ், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரமேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதியதாக கட்சியில் இணைந்த கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...