கோவையில் கடனை திருப்பி கொடுக்காத நண்பரை கொலை செய்த ஒட்டுநர் போலீசில் சரண்!

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் சாரங்கபாணி என்பவர் தனது நண்பரான சுப்ரமணிக்கு கடன் கொடுத்த நிலையில் அதனை திருப்பி கேட்டபோது தரமறுத்த சுப்ரமணியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு சாரங்கபாணி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


கோவை: ஆவாரம்பாளையத்தில் கொடுத்த கடனை திருப்பி தராததால், ஆத்திரத்தில் நண்பனையே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் அடுத்த சோபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(28). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது நண்பர் சாரங்கபாணியும் (31), அதேப் பகுதியில் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் சுப்பிரமணிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்டோ வாங்குவதற்காக ரூ.20 ஆயிரம் பணத்தை சாரங்கபாணி கடனாக கொடுத்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி கேட்கும் போது எல்லாம், இன்று, நாளை என காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் கோபத்திலிருந்த சாரங்கபாணி, இன்று மாலை மது அருந்திக் கொண்டிருந்த சுப்பிரமணியிடம் தனக்கு தரவேண்டிய ரூ.20 ஆயிரம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.

இதில் கோபமடைந்த சாரங்கபாணி தனது வாகனத்திலிருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பின்தலையில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து நண்பரையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சாரங்கபாணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...