உடுமலை அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதி விபத்து - 6 பேர் படுகாயம்!

உடுமலை அருகே வேடசந்தூரிலிருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி வேன், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில், ஆம்னி வேனில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயமடைந்து, உடுமலை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்: உடுமலை அருகே அரசு பேருந்து மீது, ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருபவர் சீனிவாசன். இவர் தனது ஆம்னி வேனில் குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஆம்னி வேன் பாலப்பம்பட்டி அருகே வந்த போது, எதிரில் கோவையிலிருந்து பழனி சென்ற அரசு பேருந்து மீது மோதியது.



இந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த சதீஷ்(25), ராஜேஸ்வரி(50), சிங்காரம்(60), வேணுகோபால்(80), பூவாத்தா(16) மற்றும் சீனிவாசன்(52) ஆகிய ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.



இந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கும், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனக்ர்.

இதனிடையே விபத்து தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...