கோவை ஈமு நிதிநிறுவன மோசடி வழக்கு - குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை.. ரூ. 34 கோடி அபராதம்!

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஈமு நிதி நிறுவனம் நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.34 கோடி அபராதம் விதித்து டான்பிட் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குயின் பார்ம் என்ற நிதி நிறுவனம் 2012ல் செயல்பட்டு வந்தது. இதில், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரப்படுத்தினர். அதில் 1114 பேர் 28.38 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்தனர். ஆனால், முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான ஈரோடு கரண்டிப்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி, இவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மேலாளர்கள் வினோத், கார்த்திகேயன், கனகராஜ், தங்கவேல், முத்து ஆகியோரை 2013 போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை டான் ஃபிட் கோர்ட்டில் நடந்து வந்தது. இதை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்டவர்களில் மயில்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை 28.72 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல கோவை மாவட்ட பொள்ளாச்சியில் குயின் ஈமு நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் 2012 ஆக செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 295 பேரிடம் 5.68 கோடி ரூபாய் மோசடி செய்து தொடர்பாக, அதன் பங்குதாரர் மயில்சாமி மற்றும் சக்திவேல் மற்றும் கிளை மேலாளர்கள் கார்த்திகேயன் அன்பழகன் குருசாமி ஆகியோரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கோவை டான்பிட் கோர்ட்டில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி குற்றம்சாட்டப்பட்டவர்களில் மயில்சாமி, சக்திவேல் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை 5.68 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...