தாராபுரம் அருகே அரசுப்பேருந்துகள் மோதி பயங்கர விபத்து - ஓட்டுநர், நடத்துநர் உடல் நசுங்கி பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது, வேகமாக வந்த மற்றொரு அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து ஒரு அரசு பேருந்து போடி செல்வதற்காக தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சாலக்கடை பகுதியில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர் பால் கண்ணன் மற்றும் நடந்துநர் முருகன் ஆகியோர் இருந்தனர்.

பேருந்தின் பழுதை சரிசெய்ய இருவரும் கீழே இறங்கி, ஆர். சி. சி. எல் தனியார் பேட்ரோல் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பேட்ரோல் வாகனம், அரசு பேருந்தின் பின்பகுதியில் பாதுகாப்பிற்காக டேஞ்சர் விளக்கை எரிய விட்டு, தடுப்பு அமைத்து மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூர் இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். அப்போது, பழுதான அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்து முன் பகுதியில் அமர்ந்து கொண்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.



அப்போது, திருப்பூரில் இருந்து செங்கோட்டை அரசு பேருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநராக கோபியை சேர்ந்த ரவிக்குமார், மற்றும் நடத்துநராக திருமூர்த்தி ஆகியோர் பணியில் இருந்தனர். புறவழிச் சாலை சாலக்கடை பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நின்று கொண்டிருந்த ஆர் சி சி எல் பெட்ரோல் ரெக்கவரி வண்டி மற்றும் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து ஆகியவற்றின் மீது மோதியது.



இந்த பயங்கர விபத்தில், இதில் பேருந்தின் முன்பகுதியில் பேருந்தின் சக்கரத்தை கழட்டி கொண்டு இருந்த ஓட்டுநர் பால்கண்ணன் மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேருந்திலும் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தரப்பினர்.

இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பால் கண்ணன் மற்றும் முருகன் ஆகியோறது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அரசு பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதி, ஓட்டுநரும், நடத்துநரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...