கோவை இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கோவையில் உள்ள ஹிதாயா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 4வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 68 மாணவியருக்கு ஆலிமா ஹாதியா எனும் பட்டம் வழங்கப்பட்டது.



கோவை: கோவையில் உள்ள ஹிதாயா மகளிர் கல்லூரியின் ‘நான்காம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயின்ற 68 மாணவியருக்கு ‘ஆலிமா ஹாதியா’ எனும் பட்டம் வழங்கப்பட்டன.



ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி. M.முஹம்மது இஸ்மாயில் இம்தாதி வரவேற்புரை ஆற்றினார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பஈ தலைமை உரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத்தலைவர் மற்றும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் S.சம்பத் குமார் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆங்கில மொழித்துறையின் பேராசிரியர் முனைவர் R.பழனிவேல் ஆகியோர் சமுதாயக் கல்லூரியில் பயின்று பட்டயப்படிப்பினை வெற்றிகரமாக முடித்த மாணவியருக்கு வாழ்த்துரை வழங்கி சான்றிதழ்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.



தொடர்ந்து, இந்த சமூகத்திற்கு செய்யவேண்டிய பங்களிப்பு குறித்து தனது சிறப்புரையில் நினைவூட்டியதுடன் ‘ஆலிமா ஹாதியா’ பட்டம் மற்றும் கேடயத்தை அவர் வழங்கினார். லால்பேட்டை ஜாமியா மான்பஉல் அன்வார் கல்லூரியின் முதல்வர் மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜி, மௌலானா மௌலவி முஃப்தி. A. நூருல் அமீன் ஹல்ரத் மன்பஈ .ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரத் தலைவர் ஜனாப் P.S.உமர் ஃபாரூக் நன்றி உரையாற்றினார்.



இந்த பட்டமளிப்பு விழாவில் அறிஞர் பெருமக்கள், ஆன்றோர்கள், சமூகத் தலைவர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...