'தமிழர்கள் எங்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை..!' - கோவையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு!

தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கலாம். ஆனால் மத்திய அமைச்சகம் எங்களை அங்கீகரித்து எங்கள் திறமையை வீணடிக்க வேண்டாம் என ஆளுநராக ஆக்கி உள்ளது என கோவை கல்லூரி விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு.



கோவை: கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊழியர்கள் தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், தொழில்கல்வியை தமிழகத்தில் கொண்டுவர தமிழை தூக்கிப் பிடிக்க நினைத்தவர்கள் கூட தொழில்கல்வியில் தமிழைப் புகுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். ஆனால், இந்த நிறுவனம் தமிழை தொழில் கல்லூரியில் கொடுத்து உள்ளது. கெமிஸ்ட்ரியை தமிழில் முதன் முதலில் சொல்லிக் கொடுத்தது இந்த கல்லூரிதான்.



பணியாளர்கள் தங்கள் வேலையை நிறுவனத்துடன் ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டும். எனக்கு தோசை பிடிக்கும் என்பதால் தோசையை செய்ய சமையல்காரையை வற்புறுத்தாமல் அவர்களுக்கு தெரிந்த இட்லியை உண்ணப் பழகிக் கொண்டேன். எனக்கு காரில் வேகமாக செல்வது பிடிக்கும் என்பதால் ஓட்டுநரை வேகமாக காரை ஓட்ட சொல்லாமல் மெதுவாக செல்லும் அதனையும் பழகிக் கொண்டேன். தற்போது உள்ள பேராசிரியர்கள் google உடன் போட்டி போட வேண்டிய நிலை உள்ளது. பேராசிரியர்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.



நான் பேராசிரியராக இருக்கும்போது கடைசி பெஞ்ச் மாணவர்களை மட்டுமே கவனத்தில் கொள்வேன். மகாபாரதத்தில் கர்ணன் மடியில் குரு உறங்கிக் கொண்டிருந்த போது வண்டுவந்து துளைத்தபோதும் ஆசிரியர் மடியில் இருப்பதால் கர்ணன் அப்படியே அமர்ந்திருந்தார். அதேபோல மாணவரிடம் ஆசிரியர் கேட்டபோது, அது மாதிரி நிகழ்வு ஏற்பட்டால் நானும் அப்படியே இருப்பேன் என்று அந்த மாணவர் பதிலளித்தார்.

அதற்கு அந்த ஆசிரியர் என்மீது அவ்வளவு பாசமா என்று கேட்ட பொழுது அந்த மாணவன் இல்லை நான் எழுந்தால் நீங்கள் மீண்டும் எழுந்திருத்து பாடம் நடத்துவீர்கள். அதனால் அதை செய்ய மாட்டேன் கூறினான். அப்படிப்பட்ட மாணவர்களே ஆசிரியர்கள் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பெரியவர் என்னிடம் இரண்டு செல்போன்கள் எப்படி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, இரண்டு மாநிலத்தையே சமாளிக்கிறேன் இரண்டு செல்போனை சமாளிக்க முடியாதா அதுபோலத்தான் அனைவரும் பணியாற்ற வேண்டும். எல்லா மாநிலங்களும் பணியாளர்கள் தினம் கொண்டாட வேண்டும். பணியாளர்கள் தினம் என்பது உன்னதமான தினம். இவ்வாறு அவர் பேசினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சவுந்திரராஜன், பணியாளர்கள் தினம் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொண்டாட வேண்டும். அந்த எண்ணம் தற்போது தோன்றுகிறது. மாநிலங்களில் அதை அமல்படுத்தும் திட்டமிருக்கிறது. ஆளுநர்கள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவது என்பது ஜனாதிபதி அவர்களால் உள்துறை அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுவதாகும்.

தமிழக மக்கள் எங்களைப்போன்ற நிர்வாகத்திறன் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அமைச்சகம் எங்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கலாம். ஆனால் மத்திய அமைச்சகம் எங்களை அங்கீகரித்து எங்கள் திறமையை வீணடிக்க வேண்டாம் என ஆளுநராக ஆக்கி உள்ளது.

எங்களைப் போன்றவர்கள் திறமை மிக்கவர்கள். எனவே அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இதைச் சொன்னால் அது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வரக்கூடும். மக்கள் திறமையானவர்களை கண்டு கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

வட மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற யார் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதை அறிந்துகொண்டு அதன்பின் கருத்து கூறலாம். தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து தாம் பேச இயலாது. அது குறித்து கட்சித் தலைவர்களிடம் கேள்வி கேளுங்கள், என்றார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...